நவராத்திரி,துர்கா பூஜை ,தசரா , நவராத்திரி கொலு 2020,நவராத்திரி பண்டிகையின் சிறப்பு ,விஜயதசமி

 

 நவம்  என்றால்  9 , ராத்திரி என்றால் இரவு.  9 இரவும் 10 நாட்களும் கொண்டாப்படும் பண்டிகை நவராத்திரி.நவராத்திரி 9 நாட்களும்  கொலு வைத்து கொண்டாடுவார்கள் கொலுவை  காண வருபவர்களுக்கு தினமும் ஒரு வகை சுண்டல் செய்து கொடுப்பார்கள். கொலுவில் மண்ணால் செய்த பொம்மைகளை வைத்து குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள், பாட்டு படுவார்கள்,  வழிபடுவார்கள்

இந்த வருடம் நவராத்திரி                                                                                                                
 17-அக்டோபர் -2020ம் தேதி ஆரம்பம் நிறைவு 25-அக்டோபர் -2020

 
நவராத்திரியின் நாட்கள்  1 - 3  - இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நவராத்திரியின் நாட்கள்  4 - 6  - ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்

நவராத்திரியின் நாட்கள்  7 - 9 - கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

துர்க்கைதேவி  8 நாட்கள் போரிட்டு 9ம் நாள் போரில்  மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

No comments:

Post a Comment