Mahandhi Serial: 28-11-25 Today's Episode Update, Episode Update & Full Story in Tamil

Mahandhi Serial: 28-11-2025 Today's Episode Update, Written Review & Highlights! 

விஜய் காவேரியிடம் சிக்கிக்கொண்டார்

 சாரதாவோட குடும்பமும் முத்துமலரோட குடும்பமும் விஜய் வீட்டுக்குள்ள போறாங்க விஜய் சொன்னதுக்காக. விஜய் முத்துமலரோட பையன்கிட்ட சொல்றாரு உங்களுக்கு ஒரு நாள்தான் டைம். அதுக்குள்ள அவங்க கிட்ட பேசி முடிவுக்கு வர முடியுமான்னு பாருங்க. முத்துமலரோட பையன் எதுவும் பேசாம பொட்டி எடுத்துட்டு போறாரு வீட்டுக்குள்ள . 


விஜய் தாத்தா கிட்டையும் பாட்டி கிட்டையும் கேக்குறாங்க சாப்படீங்களான்னு. 
தாத்தா சொல்றாரு சாப்பிட்டேன்பா. பாட்டி விஜயை திட்டறாங்க. விஜய் சொல்றாரு போமாட்டேன்னு வாசல்லயே உட்காந்துகிட்டு இருந்தா இன்னும் பிரச்சனை பெருசாதான் ஆகும். இன்னைக்கு ஒரு நாள் மாத்திரம் இங்க அவங்க இருந்தா நானே அவங்கள புரியும்படியா சொல்லி அனுப்பி விட்டுரலாம்னு பார்கறேன் பாட்டி. அவங்க இங்க பெர்மனெண்ட்டால்லாம் இருக்க போறது இல்ல. ஒரே ஒரு நாள் தான். அதுக்குள்ள பிரச்சனையை முடிச்சு வச்சிறேன் பாட்டி.

காவேரியோட அம்மாவையும் அக்காவையும் கூப்பிட்டப்ப அவங்களும் இங்க வரலன்னுதான் சொன்னாங்க. பாட்டி சொல்றாங்க விஜய். வரலன்னா விட வேண்டியதுதானே நீ விட்ருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. 

என்ன பாட்டி நீங்க? எனக்குன்னு ஒரு பொறுப்பு இல்லையா? 
இப்ப நம்ம வீட்ல யாருக்காவது பிரச்சனைன்னா காவேரி வந்து நிக்கிறால்ல காவேரிக்கு பண்றத நான் சந்தோஷமா நினைக்கிறேன் பாட்டி. 
தாத்தா சொல்றாங்க கல்யாணியோட பிரச்சனை அது கிடையாதுப்பா. நீ எல்லாத்தையும் தலையில தூக்கி போட்டுருக்கியேன்னுதான் அவ சொல்றா.
 
தாத்தா, பாவம் காவேரி அவ பிரக்னன்ட்டா இருக்கா.யோசிச்சு பாருங்க அவளுக்கு எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும்னு அவ எப்படி தாத்தா தனியா ஹேண்டில் பண்ணுவா அவகிட்ட இதை பத்தி பேசாம இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ராதா சொல்றாங்க இவன் நம்மள சமாதானப்படுத்த வரலமா காவேரியை எதுவும் சொல்லக்கூடாதுன்னு வந்துருக்கான். அப்படி இல்ல சித்தி நான் உங்க கஷ்டத்தையும் புரிஞ்சுக்கிறேன். காவேரியோட நிலைமையும் எடுத்து சொல்றேன் அவ்வளவுதான் தாத்தா.

 உங்க கூட தனியா பேசணும் வாங்க.விஜய் அவர் பெட்ரூமுக்கு வராரு. காவேரி உட்காந்துகிட்டு இருக்காங்க. நீ என்னெல்லாம் சொல்லுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஸ்ட்ரெஸ்ஸ விடு காவேரி. இல்லங்க இங்க இருக்க பிரச்சனை பத்தாதுன்னு அந்த குடும்பம் வேற வந்து உட்காந்துகிட்டு இருக்காங்க. எல்லாம் நான் சத்தியமா எதிர்பார்க்கல. அப்படிதான் காவேரி.பிசினஸ்லயும் அப்படிதான். பர்சனல் லைஃப்லயும் அப்படிதான். 

காவேரி, முத்துமலர் குடும்பத்தை பத்தியே விஜய் கிட்ட சொல்லிக்கிட்டே இருக்காங்க. விஜய் காவேரியை சமாதானப்படுத்தி வைக்க முயற்சி
பண்றாரு. காவேரி கூட பேச்சு கொடுக்குறாரு.காவேரி பேசாம அந்த வீட்டோட ஒரு பங்கை அந்த குடும்பத்துக்கு தர்ற மாதிரி பிளான் பண்ணலாம்ல்ல.அத்த, யமுனா, கங்கா அவங்க ஷேர்ல நம்ம கை வைக்க வேண்டாம். அந்த பங்கு அப்படியே இருக்கட்டும். இவங்களுக்கு நம்மளோட பங்கை இவ்வளவுதான் காசுன்னு கையில கொடுத்து அனுப்பி விட்டுருவோம் விஜய் சொல்றாரு. காவேரி சொல்றாங்க எங்க அப்பா சம்பாரிச்ச காசு. அதுவும் எதுக்கு அவங்களுக்கு தூக்கி கொடுக்கணும். எல்லாம் ஒத்துக்க முடியாதுங்க. காவேரி இப்போதைக்கு இதை
பத்தி பேச வேணாம். நீ ரெஸ்ட் எடு நிம்மதியா தூங்கு காவேரி குட் நைட். குட் நைட் விஜய்.

விஜய் யோடா பிளான் என்னனு பொறுத்து இருந்து பார்ப்போம். 

 

Comments