மழைகால ஸ்னாக்ஸ்
மழை காலத்தில் மாலை நேர ஸ்னாக்ஸ் என்ன என்ன சாப்பிடலாம்
1. தேநீர்
2. சுட சுட வடை
3. சுட சுட பஜ்ஜி
4. சுட சுட போண்டா
5. பக்கோடா
6. சூடான சமோசா
மழைகால ஸ்னாக்ஸ்
மழை காலத்தில் மாலை நேர ஸ்னாக்ஸ் என்ன என்ன சாப்பிடலாம்
1. தேநீர்
2. சுட சுட வடை
3. சுட சுட பஜ்ஜி
4. சுட சுட போண்டா
5. பக்கோடா
6. சூடான சமோசா
நவம் என்றால் 9 , ராத்திரி என்றால் இரவு. 9 இரவும் 10 நாட்களும் கொண்டாப்படும் பண்டிகை நவராத்திரி.நவராத்திரி 9 நாட்களும் கொலு வைத்து கொண்டாடுவார்கள் கொலுவை காண வருபவர்களுக்கு தினமும் ஒரு வகை சுண்டல் செய்து கொடுப்பார்கள். கொலுவில் மண்ணால் செய்த பொம்மைகளை வைத்து குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள், பாட்டு படுவார்கள், வழிபடுவார்கள்
இந்த வருடம் நவராத்திரி
17-அக்டோபர் -2020ம் தேதி ஆரம்பம் நிறைவு 25-அக்டோபர் -2020
நவராத்திரியின் நாட்கள் 1 - 3 - இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நவராத்திரியின் நாட்கள் 4 - 6 - ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
நவராத்திரியின் நாட்கள் 7 - 9 - கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
துர்க்கைதேவி 8 நாட்கள் போரிட்டு 9ம் நாள் போரில் மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.
பிரம்மாவுக்கும் பெருமாளுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்சை வந்தது. அவர்கள் சிவனை அணுகினார்கள் அதற்கு அவர் நெருப்பு வடிவாக வானுக்கும் பூமிக்கும் ஆக உயர்ந்து நின்றார் தனது உச்சியை பிரம்மாவும் பாதத்தை பெருமாளும் பார்த்துவரும் படி அனுப்பினார். இருவராலும் அதை பார்க்க முடியவில்லை. உடனே பெருமாள் தனது தோல்வியை சிவனிடம் ஒப்புக்கொண்டார் . பிரம்மாவோ முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார் . பிரம்மா பொய் சொன்னதால் இனி மேல் பூமியில் பிரம்மாவுக்கு பூஜை கிடையாது என்ற தண்டனையை சிவன் வழங்கினார் . பின் சிவனின் நெருப்பு வடிவம் குளிர்ந்து உயர்ந்த மலையாக மாறியது . இதுவே அண்ணாமலை ஆனது .
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை
திருவண்ணாமலை என்ற பெயர் வந்த காரணம்
அண்ணா என்னும் சொல்லுக்கு நெருங்க முடியாது என்ற பொருளும் உண்டு.
நெருப்பு மலை என்பதால் யாராலும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது . கலியுகத்தில் நம்மீது அன்பு கொண்டு மலையாய் இருக்கும் சிவன் குளிர்ந்து நம்மை அருகில் வர அனுமதிக்கிறார் .
முன்பு அண்ணாமலையில் வசித்த அடியவர் ஒருவர் கணம்புல் கொண்டு திரியிட்டு ஸ்வாமிக்கு விளக்கேற்றி வந்தார் . அப்போது அந்த புல்லுக்கு தட்டுப்பாடு வந்தது . அப்போது தன்முடியையேதிரியாக்கி தீபம் ஏற்ற முயன்றார் . சிவனும் பார்வதியும் தோன்றி அவரை தடுத்து ஆட்கொண்டனர் . அவரது மனோதிடத்தை பாராட்டி நாயன்மார்களில் ஒருவராக்கினார் . கணம்புலால் விளக்குஏற்றியதால் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டார் .
ஒரு மலையே சிவனாக இருக்கிறது என்றால் அது தான் அண்ணாமலை . அண்ணா என்றால் மிக உயர்ந்த அண்ணாந்து பார்க்க வைக்கும் மலை அண்ணாமலை அத்துடன் மரியாதை நிமித்தம் ஆக திரு சேர்த்து திருவண்ணாமலை என்று அழைக்கப்பட்டது .
இங்கே அண்ணாமலையாரும் , அபிதகுஜாம்பிகை என்னும் உண்ணாமுலை அம்மனும் அருள் தருகின்றனர் . இந்த அம்மன் எல்லா உயிர்களுக்கும் அருள் புரிபவள் உண்ணாமுலை எவ்வளவு கேட்டாலும் வரம் தரும் அன்னையெனப்பெயர் பெற்றாள் .
திருவண்ணாமலை சிறப்பு
திருவண்ணாமலை 2748 அடி உயரம் கொண்டது இதை ஒரு முறை சுற்றி வர 14 கிலோமீட்டர் ஆகும் . 200 கோடி ஆண்டுக்கு மேலாக இந்த மலை உள்ளது . இந்த திருவண்ணாமலை ஒரு பழமையான , வரதையான மலையாகும் .
அண்ணாமலையார் கோவில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது . இங்கு 9 கோபுரங்கள் உள்ளது . இதனுடைய ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது .
திருக்கார்த்திகை அன்று இந்த திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம் ஆகும் . இது பெரும் விழாவும் ஆகும் .
இந்த தீபத்திற்கு பெயர் பரணி தீபம் .மலை தீபம் என்றும் கூறுகிறார்கள் .
கிரிவலம் செல்லும் முறை
திருவண்ணாமலைக்கு கிரி வலம் செல்லும் பக்தர்கள் கிரிவல பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்க கோவில்கள் உள்ளது .
முதலில் இந்திரலிங்கத்தை வணங்கிவிட்டு கிரி வலத்தை துவங்க வேண்டும் . தொடர்ந்து
2.அக்னி லிங்கம்
3. எம லிங்கம்
4. நிருதி லிங்கம்
5. வருண லிங்கம்
6. வாயு லிங்கம்
7. குபேர லிங்கம்
தரிசனம் முடித்து சுடுகாட்டில் உள்ள
8. ஈசான லிங்க கோவிலுக்கு செல்ல வேண்டும்
மனித வாழ்வின் முடிவு நிலை இறப்பு என்னும் தத்துவத்தை இங்கே உணர முடியும் .
இதன்பிறகு அண்ணாமலையாரை கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் . இதனுடன் கிரிவலமும் அண்ணாமலையார் தரிசனமும் நிறைவு பெரும் . இதுவே கிரிவலம் ஆகும் .
திருவண்ணாமலையின் விசேஷ நாட்கள்
கிரிவலம் வர உகந்த நாட்கள் திருக்கார்த்திகை, பௌவர்ணமி கிரிவலம் , மஹாசிவராத்திரி , சனிப்பிரதோஷம் இந்த நாட்களில் கிரி வலம் செல்வது சிறப்பானது .