Easy Jangiri recipe in Tamil , Jangri recipe, ஜாங்கிரி செய்வது எப்படி, ஜாங்கிரி செய்முறை - Diwali Recipe 6
ஜாங்கிரி செய்வது எப்படி
ஜாங்கிரி செய்வதற்கு தேவையான பொருட்கள்
உளுந்து – 100 கிராம்
பச்சரிசி - 1 மேசைக் கரண்டி
கார்ன்ஃப்ளவர் – 100 கிராம்
சீனி – 500 கிராம்
தண்ணீர் – 250 மில்லிலிட்டர்
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
Food Colour (ஆரஞ்சு + எலுமிச்சை மஞ்சள்) - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
My Other Diwali special recipes Bhadusha, Manaparai Murukku Recipe,Sattur Karasev Recipe Tamil,Inippu sev Recipe Tamil ,Ravai Kesari
Easy Ring Murukku Recipe in Tamil, Jangri recipe,Kaju Katli Recipe in Tamil,Bombay Halwa,Chandrakala Sweet,Muscoth Halwa,Paneer Gulab Jamun,Besan Burfi, Paneer Kalakand
செய்முறை விளக்கம்
1. உளுந்து,பச்சரிசி 45 நிமிடம் ஊற வைக்கவும்
2. ஊற வைத்த உளுந்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்
3. குறிப்பு எதில் அரைத்தாலும் குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ் கட்டி போட வேண்டும் ஏனென்றால் மாவு சூடானால் புளித்து விடும்
4. உளுந்தை பந்துபோல் ஆட்டிக் கொள்ள வேண்டும் கிரைண்டரில் ஆட்டும்போது ஆரஞ்சு + எலுமிச்சை Food Colour, கான்பிளவர் ,உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும்
5. ஒரு சட்டியில் சர்க்கரை, தண்ணீர் நன்றாக கொதிக்க வைக்கவும் சர்க்கரை பாகு கொதிக்கும் போது பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
6. தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகில் ஏலக்காயை சேர்க்க வேண்டும்
7. குறிப்பு ஆட்டி வைத்த உளுந்த மாவு தண்ணியாக போனால் கான்பிளவர் மாவை சேர்த்து உளுந்த மாவு கெட்டியாக வரும்படி செய்ய வேண்டும்
8. ஜாங்கிரி மாவை ஜாங்கிரி புழியும் துணியில் போட வேண்டும்
9. மறுப்புறம் தட்டையான பாத்திரத்தில் எண்ணெயை காய வைக்க வேண்டும் எண்ணெய் சூடான பிறகு ஜாங்கிரியை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்
10. போட்டெடுத்த அந்த ஜாங்கிரியை சர்க்கரைப்பாகில் போடா வேண்டும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு ஜாங்கிரி சாப்பிட ரெடி.
11. சுவையான ஜாங்கிரி, இப்போது சாப்பிடத் தயாராக உள்ளது.
Jhangri, & Jalebi Guide: How to Make It Crispy
Jangiri Recipe Ingredients
Urad dal – 100 grams
Raw Rice - 1 Tablespoon
Cornflour – 100 grams
Sugar – 500 grams
Water – 250 milliliters
Cardamom powder – ¼ teaspoon
Salt – 1 pinch
Food Colour ( Orange + Lemon yellow) - 1/4 Tsp
Oil - For Fry
Jangiri preparation time step by step Guide
1. Soak urad dal, rice for 45 minutes
2. You can grind the soaked urad dal in a grinder or mixer
3. Note: When you grind, add cold water or ice cubes because the flour will turn sour if it gets hot
4. You should grind the urad dal like a ball. While grinding in the grinder, add orange + lemon food colour, cornflour and salt.
5. Boil sugar and water in a pan. When the sugar syrup boils, turn off the stove when it becomes sticky consistency.
6. Add cardamom to the prepared sugar syrup.
7. Note: If the urad dal becomes watery, add cornflour to make the urad dal thick.
8. Put the Jangiri dough in a Jangiri-making cloth.
9. On the other hand, Take a flat vessel heat the oil . After the oil is hot, put the Jangiri in the oil and fry it.
10. You have to put the Jangiri in a Sugar Syrup and after five minutes the Jangiri is ready to eat.
11. Yummy mouth watering Jangiri is ready to eat now
Comments
Post a Comment